உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அதிகரிக்காமல் தடுக்க உதவும் தனியாவை நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்வது எவ்வளவு நல்லது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
உணவில் சுவையை மட்டும் கொடுக்க கூடிய பொருளாக பார்க்கக் கூடியது தான் மல்லி. ஆனால் கொத்தமல்லியை தனியா விதைகள் என்று கூறுவோம். இது இரண்டும் ஒன்றுதான். கொத்தமல்லியை காட்டிலும் கொத்தமல்லி விதைகளை தனியா விதைகள் இன்னும் பலனளிக்கக் கூடியது. பழுப்பு நிறமாக நறுமணத்தோடு இருக்கும் இவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. கொத்தமல்லி விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதனை அளவோடு பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது.
தனியாவில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது. ஒரு டீஸ்பூன் தனியாவில் கலோரி 2, புரதம் ஒரு கிராம், கொழுப்பு ஒரு கிராம், கார்போஹைட்ரேட் ஒரு கிராம் உள்ளது. கொத்தமல்லி விதைகளில் உள்ள சத்துகள் உயர்ந்தவை என்று சொல்லலாம். இதயம் நன்றாக இருக்க இதனை 5 தினமும் சாப்பிட்டால் நல்லது நடக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் அடிக்கடி தனியா விதைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். சருமத்தில் முகப்பரு, அரிப்பு, எண்ணெய் பசை போன்ற பிரச்சினைகள் இருந்து தடுக்க மற்றும் உலர் சருமம், அரிப்பு, புண்கள், வாய்ப்புண்கள் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த தனியா விதைகள் தீர்வளிக்கிறது. கொத்தமல்லி விதைகள் மன அழுத்தத்தைக் குறைகிறது .