Categories
தேசிய செய்திகள்

உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக பயன்பாட்டை கேஸ் சிலிண்டர்களின் விலை 115 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை மொத்தம் 610 குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பல்வேறு நகரங்களில் வர்த்தக சிலிண்டர் விலை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வர்த்தக சிலிண்டர் (19 கிலோ) விலை:

சென்னை – 1893 ரூபாய் (பழைய விலை 2009.50 ரூபாய்)

மும்பை – 1696 ரூபாய்

கொல்கத்தா – 1846 ரூபாய்

டெல்லி – 1744 ரூபாய்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை (மாற்றமில்லை):

சென்னை – 1068.5 ரூபாய்

டெல்லி – 1053 ரூபாய்

கொல்கத்தா – 1079 ரூபாய்

மும்பை – 1052.5 ரூபாய்

Categories

Tech |