தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் இருப்பை பதிவு செய்த மொபைல் போனிலிருந்து 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு விவரத்தை தெரிந்து கொள்ள பிடிஎஸ் என்று டைப் செய்த இடைவெளி விட்டு 101 என டைப் செய்து மேற்கண்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
அதே முறையில் பிடிஎஸ் 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்து உள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பிடிஎஸ் 107 என டைப் செய்து எஸ் எம் எஸ் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.