Categories
மாநில செய்திகள்

உங்க ஏரியாவில் கொசு பிரச்சினை இருக்கா…? அப்ப இந்த எண்ணிற்கு கால் பண்ணுங்க… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!!

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் வீட்டின் பக்கத்தில் மழைநீர் தேங்காமல் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது கொசு ஒழிப்புப் பணிக்கென 1262 நிரந்தர கொசு ஒழிப்புப் பணியாளர்களும், 2359 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3621 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும் என்று எண்ணினால் 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழைக்காலங்களில் கொசு உருவாக வாய்ப்புள்ள இடங்களை மாநகராட்சிக்கு தெரிவித்து மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |