தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார்களை தெரிவிக்க 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். புகைப்படத்துடன் கூடிய தகவலை தெரிவிக்க 94458-50811 என்ற வாட்ஸ் அப் பயனப்டுத்திக்கொள்ளலாம் எனவும், இது 24 மணி நேரமும் இயங்கும் என அறிவித்துள்ளார்.