உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் அயோத்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட கரசேவகர்கள் ரத்தத்தால் பூசப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர்கள் போல் சிவப்பு தொப்பிகளை அணிந்துள்ளனர்.
ஆனால் தனது அரசாங்கம் அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களை முந்தைய சமாஜ்வாதி அரசு புறக்கணித்தது. அதேபோல் சமாஜ்வாதி கட்சியினர் உத்திர பிரதேசத்தையும், அதன் மக்களையும் தங்களுடையவர்களாக ஒரு நாளும் நினைத்ததில்லை என்று கூறி பரபரப்பாக பேசியுள்ளார்.