Categories
பல்சுவை

உங்க கிச்சனை சுத்தி வரும்…. குட்டி குட்டி பூச்சி, கொசுவை ஓட ஓட விரட்டுனுமா…. அப்ப இத மட்டும் செய்யுங்க போதும்….!!!

வீட்டை சுத்தம் செய்யும்போது அலமாரியில் பொருள் வைக்கும் இடங்களில், சிறுசிறு கொசுவும் ஈக்களும் வெளியேறும் இதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதை எப்படி விரட்டுவது என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

அலமாரியில் பொருட்கள் வைக்கும் இடத்தில், பாத்திரம் கழுவும் சிங்கில் சிறுசிறு பூச்சிகள் வரும். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது, இருப்பினும் சமைக்கும் பொருள்களில் அது படும்போது அது ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். இவற்றை விரட்ட உதவும் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே நாம் இதனை விரட்ட முடியும்.

முதலில் மஞ்சள் சேர்த்த உப்பு சமையலறையில் உணவுப் பொருட்களில் இருக்கும் இடத்தில் மஞ்சளுடன் கல் உப்பை பொடியாக அரைத்து இரண்டையும் கலந்து விடுங்கள். பின்னர் அதனை பூச்சிகள் இருக்கும் இடத்தில் தெளித்து விட்டால் பூச்சிகளும் ஈக்களும் வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு தோல் கொசுக்கள், ஈக்கள் கிச்சன் சிங்க் அருகில் இருந்தால் நீங்கள் ஆரஞ்சு தோலை பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அலமாரியின் ஓரிடத்தில் தொங்க விடுங்கள். இதனால் பூச்சிகள் வராமல் தடுக்க முடியும்.

சுக்குப் பொடியை மூன்று டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீர் விட்டு கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கிச்சன் பாத்திரங்கள் வைக்கும் இடங்களில் வைத்தால் சிறுசிறு பூச்சிகள் வராது.

கொசுக்கள் போன்றவற்றை வெளியேற்றி மீண்டும் வராமல் தடுக்க ஒரு கப் வினிகரில் கால் டீஸ்பூன் எண்ணெயை கலந்து பிறகு அரை கப் குளிர்ந்த நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். சமையலறையில் சிங்க் மற்றும் அலமாரியில் ஸ்பிரே செய்து விடவும். மறுநாள் பூச்சி எல்லாம் இறந்து விடும்.

அடுத்தது கற்பூரத்தைப் பொடியாக்கி நன்றாக மையாக அரைக்கவும். பின்னர் இலவங்கத்தை தனியாக எடுத்து கற்பூரத்தில் பிரட்டி உணவுப் பொருட்கள் வைக்கும் இடத்தில் ஆங்காங்கே சொருகி வைக்கவும். இதன் வாசனையை பார்த்து பூச்சிகள் அண்டாது. கிச்சன் சிங்க் மீது உள்ள இடத்தில் வைத்தால் சிறுசிறு பூச்சிகள் அண்டாது.

Categories

Tech |