இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் ஆதார் கார்டு மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டு விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். பலரும் தங்களது முகவரி மற்றும் மொபைல் நம்பர் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால் அந்த விவரங்களை ஆதார் அட்டையில் உடனுக்குடன் அப்டேட் செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக மொபைல் நம்பர் மிகவும் இன்றி அமையாத ஒன்று.இந்த மொபைல் நம்பர் இல்லாவிட்டால் ஆதார் கார்டில் நீங்கள் எந்த ஒரு அப்டேட்டையும் செய்ய முடியாது. இந்நிலையில் ஆதார் அட்டைதாரர்களுக்கு ஆதார் அமைப்பு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஆதார் விவரங்களை 10 வருடங்களுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்.
குழந்தைகளை பொருத்தவரை ஐந்து வயது முதல் 15 வயது வரை பயோமெட்ரிக் விவரங்களை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். கைரேகை மோசடிகளை தடுக்க புதிய வசதியை ஆதார் அமைப்பு தற்போது ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக ஆன்லைன் படம் மோசடிகள் தடுக்கப்படும். அதனால் கைரேகை பதிவில் பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் மூலமாக கைரேகை பதிவுக்கு சொந்தக்காரர் உயிரோடு தான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியும்.