இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டை வைத்து வங்கியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.அதனால் உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் ஆதார் கார்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அப்படி ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என ஆதார அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி ஆதார் கார்டு ஓடிபியை யாரிடமும் சொல்லக்கூடாது. ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் எப்போதும் ஆக்டிவாக இருக்க வேண்டும். புதிய நம்பர் மாற்றி இருந்தால் உடனே ஆதாரில் அதனை அப்டேட் செய்ய வேண்டும் . ஆதார் கார்டை வெரிஃபை செய்வதற்கு https://myaadhaar அல்லது uidai.gov.in என்ற இணையதள பக்கத்தை பயன்படுத்தவும் .
ஆதார் தொடர்பான க்யூ ஆர் கோடுகளை தேவையில்லாமல் ஸ்கேன் செய்யக்கூடாது. ஆதார் எண்கள் பகுதி மறைக்கப்பட்ட மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும். ஆதார் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள மொபைல் போனில் myaadhaar செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தவும்.ஒருவரின் ஆதார் கார்டை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.ஆன்லைன் இணையதளங்களில் கடன் வாங்குவதற்காக முன்பின் தெரியாத இடங்களில் ஆதார் எண்ணை வழங்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.