Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருந்தா மட்டும் போதும்…. எல்லாமே உங்கள தேடி வரும்…. அரசின் அதிரடி சலுகைகள்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் ரேஷன் கார்டு மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் மக்களுக்கு பல சிறப்பு தொகுப்புகள் மற்றும் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

தமிழகத்திலும் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை மற்றும் 21 மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் அரசு சிறப்பு பரிசை அறிவிக்கும் என மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் வரும் ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே அரசின் இந்த சலுகைகள் அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். இதனை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் ஒருவேளை ரேஷன் கார்டு இல்லாவிட்டால் உடனே விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் ரேஷன் கார்டு விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |