Paytm அதன் போஸ்ட்பெய்ட் மினி என்கிற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Buy Now, Pay Later சேவையின் விரிவாக்கமாகும். பேடிஎம்மின் போஸ்ட்பெயிட் மினி உடனடி கடன்களை மிகவும் விரைவாக வழங்கும். Paytm நிறுவனத்தின் கூற்றுப்படி தற்போதைய கொரோனா பரவல் காரணமாக விதிக்கபட்ட ஊரடங்கு காலங்களில் பணப்புழக்கத்தை பராமரிக்கவும், வீட்டு செலவுகளை நிர்வகிக்கவும் இது உதவும்.
போஸ்ட்பெய்ட் மினி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Paytm உங்களுக்கு ரூ.250 முதல் ரூ.1000 வரையிலான கடன்களுக்கான கடன் உதவியை வழங்குகிறது. இதில் கூடுதலாக Paytm Postpaid இன் இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆக ரூ.60,000 வரை கிடைக்கும். இதன் கீழ் மொபைல் மற்றும் DTH ரீசார்ஜ்கள், கேஸ் சிலிண்டர் முன்பதிவு, மின்சாரம் மற்றும் வாட்டர் பில்கள், ஷாப் ஆன் பேடிஎம் மால் உட்பட பலவற்றையும் நீங்கள் சேர்க்கலாம்.
இந்த சேவையின் மூலம், 0% வட்டியின் கீழ் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு Paytm போஸ்ட்பெய்ட் வசதியானது 30 நாட்கள் வரை காலத்தை வழங்குகிறது. இதில், குறைந்தபட்ச கன்வினியன்ஸ் கட்டணம் மட்டுமே இருக்கும். மேலும் Paytm Postpaid மூலம், நீங்கள் நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வணிக கடைகளில் பணம் செலுத்தலாம்.