Categories
மாநில செய்திகள்

உங்க கிட்ட PF கணக்கு இருக்கா…? இபிஎப் ஆல் கிடைக்கும் காப்பீடு திட்ட பலன் என்னென்ன…? இதோ முழு விவரம்..!!!!!

ஊதியம் பெறுபவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிஎஃப் ஆக கழிக்கப்பட்டு வருகிறது சேவை துறையிடம் தொடர்புடையவர்களுக்கு ஓய்வுக்கு பின் பிஎப் கணக்கு மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிஎஃப் பணத்தின் மூலமாக காப்பீடு வசதியும் கிடைக்கின்றது. இதை எப்படி பயன்படுத்திக் கொள்வது? இந்த காப்பீட்டு பணத்தை எடுக்க யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது? போன்ற அனைத்தையும் பற்றி இங்கே காண்போம். இந்த வசதி இபிஎஃப்ஓ மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் epfoவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேலும் இதற்காக நீங்கள் தனியாக இயங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் அல்லது அமைப்பே இந்த வசதியை வழங்குகிறது. இதனை அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது உங்களிடம் பிஎப் கணக்கு இருந்தால் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகை இந்த வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது. இதன் மூலமாக உங்கள் குடும்பம் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள தகுதி பெறுகிறது.

இதற்கான தகுதிகள் என்ன.?

epfoவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் ஈபி எப்ஓ வால் காப்பீட்டு திட்ட பலன் வழங்கப்படுகிறது. உடல் நலக்குறைவு அல்லது ஏதேனும் விபத்து காரணமாக இபிஎப்ஓ உறுப்பினர் திடீரென மரணம் அடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஏழு லட்சம் வரை காப்பீடு தொகை கிடைக்கிறது. இருப்பினும் இதற்கு இபிஎப்ஓ உறுப்பினர்கள் தொடர்ந்து 12 மாதங்கள் சேவை காலத்தில் இருந்திருப்பது அவசியமாகும் எனினும் பணியாளர் ஒரே இடத்தில் வேலை செய்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த காப்பீட்டின் பலன் வருடத்திற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் கிடைக்கின்றது. மேலும் இந்த காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ள புதிய அலுவலகத்தில் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள் இபிஎப்ஓஇன் ஆவணங்களில் இருக்க வேண்டும்.

யார் உரிமை கிளைம் செய்ய முடியும்.

ஊழியர் திடீரென உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் உரிமை கோரும் உறுப்பினர்கள் பணியாளரின் நாமினியாக இருக்க வேண்டும் அதாவது நிறுவனத்தில் சேரும்போது நீங்கள் யாரை நாமினியாக நியமித்தீர்களோ அவர் உங்கள் காப்பீட்டு பணத்தை கிளைம் செய்யலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை.?

நீங்கள் pf இன் கீழ் கிளைம் செய்து கொள்ள விரும்பினால் காப்பீட்டு நிறுவனத்திற்கு பணியாளர் இறப்பு சான்றிதழ், கிளைம் செய்யும் நபரின் சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்கள் போன்றவை தேவைப்படும்.

இ-நாமினேஷன் வசதி.

ஏழு லட்சம் வரையிலான காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ள ஈ நாமினேஷன் வசதியும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆன்லைனில் உறுப்பினர்கள் நாமினியை நியமித்துக் கொள்ளலாம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாமினியின் தகவலையும் நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

எவ்வளவு காப்பீடு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.?

காப்பீட்டின் நன்மையை பெறுவதற்கு நீங்கள் எந்த பணத்தையும் பிரிமியமாக தனியாக செலுத்த வேண்டிய அவசியமில்லை மேலும் இந்த திட்டத்திற்கான பங்களிப்பு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் செய்யப்படுகிறது.

Categories

Tech |