Categories
உலக செய்திகள்

உங்க குசும்புக்கு அளவே இல்லையா….? நீங்க பண்றத நீங்களே பாக்கீங்களே…. செம வைரல்….!!!

அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது மக்கள் நேற்று முன்தினம் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களில் பலர் அங்கேயே தங்கியுள்ளனர்.

அவர்கள் மாளிகையில் உள்ள குளியல் அறையில் குளிப்பது, நீச்சல் குளத்தில் குளிப்பது, தரையில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களும் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகிறது. மேலும் சில போராட்டக்காரர்கள் தரையில் படுத்து கொண்டு தங்கள் போராட்டத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |