உங்களின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் ஒரு ரீசார்ஜில் பயன்படுத்திக்கொள்ள எது சிறந்தது என்று பார்க்கலாம்.
மேற்குறிப்பிட்ட அனைத்து டெலிகாம் நிறுவனங்களுமே ரூ.999 பேக்களைக் கொண்டுள்ளன, இவைகள் ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவை வழங்குகின்றன, அவை பெரும்பாலான குடும்பங்களுக்கு போதுமானதாக இருக்கக்கூடும், மேலும் இந்த திட்டங்களும் பேமிலி ஆட்-ஆன் ஆதரவுடன் தொகுக்கப்படுகின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒரே விலை நிர்ணயம் கொண்ட நான்கு (ஏர்டெல், ஜியோ, வி மற்றும் பிஎஸ்என்எல்) நிறுவனங்களின் திட்டங்களில் எது பெஸ்ட்? வாருங்கள் நன்மைகளை அடிப்படையாக கொண்டு ஒப்பிட்டு பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.999 திட்டமானது 200 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் தொகுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்யும் பயனர்கள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று கூடுதல் சிம் கார்டுகளைப் பெறலாம்.
OTT நன்மைகளைப் பொறுத்தவரை, இந்த திட்டம் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாக்களுடன் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் பயனர்கள் அமேசான் ப்ரைம் சந்தாவுக்கு கூடுதலாக ரூ.99 செலுத்தலாம். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் பில்லிங் சுழற்சியைப் பொறுத்தது.
பாரதி ஏர்டெல் ரூ.999 திட்டம்:
இந்த திட்டம் நான்கு “பேமிலி ஆட் ஆன்”களை இணைக்க அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் சில கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது மொபைல் செக்யூரிட்டி மற்றும் கூடுதல் இணைப்புகளுக்கான வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் கொண்டிருக்கும். வழங்கப்பட்ட டேட்டாவின் நுகர்வு முழுமையாக முடிந்ததும், ஒரு எம்பிக்கு 2 பைசா என்கிற மதிப்பின் அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பிஎஸ்என்எல் ரூ.999 திட்டம்:
கிடைக்கும் சிம்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பயனர்கள் மூன்று கூடுதல் இணைப்புகளைப் பெறலாம். ஒவ்வொரு இணைப்பிற்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 75 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும். வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையானயு ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற வரம்பைக் கொண்டுள்ளது, அதன் பிறகு வாடிக்கையாளர் அடிப்படை திட்டதின்கீழ் கட்டணம் வசூலிக்கப்படும். தற்கால பொழுதுபோக்குகளின் முக்கியத்துவத்தை இந்த திட்டம் கருத்தில் கொள்ளவில்லை, அதாவது இது எந்தவொரு OTT இயங்குதள அடிப்படையிலான சந்தாவையும் வழங்கவில்லை.
வி நிறுவனத்தின் ரூ.999 பேமிலி பிளான் ஆனது “உ.பி. கிழக்கு வட்டத்தில் பேமிலிக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களின்” கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, 200 ஜிபி அளவிலான டேட்டா, 200 ஜிபி வரை ரோல்ஓவர் ஆதரவு, 5 தனிப்பட்ட இணைப்புகள், ஒரு முதன்மை மற்றும் நனவு ஆட்ஆன்இணைப்புகளை வழங்குகிறது. உடன் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் போன்ற பொதுவான அம்சங்களையும் வழங்குகிறது.
OTT நன்மைகளை பொறுத்தவரை, அமேசான் ப்ரைம், ZEE5 பிரீமியம் ஆகியவற்றிற்கான ஒரு வருட சந்தா மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான சந்தாவைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் எல்லா இடங்களிலும் கிடைக்காமல் போகலாம், எனவே, இந்த திட்டத்தின் மீது ஆர்வம் கொண்ட பயனர்கள் இதன் மாற்று திட்டமான ரூ.1,099-ஐ தேர்வு செய்யலாம். இது வரம்பற்ற டேட்டா மற்றும் நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வருகிறது. ஆனால் இது பேமிலி ஆட்-ஆன் பிளான் அல்ல, இது ஒரு இணைப்புக்கு மட்டுமே பொருந்தும்.