இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொது மக்களுக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆண், பெண், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருமே பயன்பெறும் வகையில் நிறைய பாலிசிகள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒரு பாலிசி தான் “நியூ children’s மணி பேக் பிளான்”பாலிசி. இந்த பாலிசியை உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் பரிசாக அளிக்கலாம். அதனால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். உயர்கல்வி மற்றும் திருமணம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்த பாலிசியில் கிடைக்கும் பணம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இதில் தினமும் நீங்கள் 150 ரூபாய் என்ற விதத்தில் முதலீடு செய்தால் மட்டுமே போதும். மொத்தம் 25 ஆண்டுகள் முதிர்வு கொண்டது இந்த பாலிசி. இதற்கான முதிர்வு தொகை பல்வேறு தவணைகளாக வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயது ஆகும்போது முதல் தவணையும், 20 வயதில் இரண்டாவது தவணையும், 22 வயதில் மூன்றாவது தவணையும் கிடைக்கும். தவணை முறையில் அறுபது சதவீத தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள 40% முதிர்வு காலத்தில் கிடைக்கும்.
இதில் குறைந்தபட்ச காப்பீடு தொகை ஒரு லட்சம், அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. பிறந்த குழந்தை முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த பாலிசியை நீங்கள் எடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு 25 வயது ஆகும்போது இந்த பாலிசியில் முழு பயனும் அவர்களுக்கு கிடைக்கும். தினமும் 150 ரூபாய் வீதத்தில் மொத்தம் 25 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 14 லட்சம். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை 19 லட்சம். பாலிசிதாரர் பாலிசி காலத்தில் உயிர் இழக்காமல் இருந்தால் இந்த பலனை பெறலாம்.