இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் பயன்படுத்தும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலரும் அதிகம் டிவி பார்க்கின்றனர். இதனைப் பெற்றோர்கள் எப்படி கண்டித்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. தொடர்ந்து டிவி பார்ப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது.
இந்நிலையில் சீனாவில் அதிகமாக டிவி பார்த்த 8 வயது மகனை பெற்றோர் தண்டித்த விதம் பேசு பொருளாக உள்ளது. சிறுவன் அதிகமாக டிவி பார்த்ததால் வித்தியாசமாக தண்டனை அளிக்க விரும்பிய பெற்றோர் ஒரு இரவு முழுக்க அவனை டிவி பார்க்க வைத்துள்ளனர். சிறுவன் தூங்கினாலும் மீண்டும் மீண்டும் எழுப்பி டிவி பார்க்க வைத்துள்ளனர். இந்த விஷயம் சிறுவனின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.