Categories
தேசிய செய்திகள்

உங்க குழந்தைக்கு ஆதார் இல்லையா…? வீட்டிலிருந்தபடியே எப்படி விண்ணப்பிப்பது…? இதோ ஈஸியான வழி…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. எனவே உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பிப்பது அவசியம். இந்நிலையில் ஈட்டிலிருந்தே ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.

முதலில் UIDAI-இன் uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் அட்டை ரரெஜிஸ்டர் என்பதை தேர்வு செய்து குழந்தையின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், பயோமெட்ரிக் உள்ளிட்ட தேவையான தகவல்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். பின் அப்பாயின்மென்ட் என்பதை கிளிக் செய்வதன் மூலம் ரெஜிஸ்டர் செய்யலாம். இதையடுத்து அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் செல்லவும். அங்கு குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு ஆதார் அட்டை வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடும்.

 

Categories

Tech |