Categories
தேசிய செய்திகள்

உங்க குழந்தைக்கு இனி ஈஸியா ஆதார் கார்டு வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பாருங்க…..!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம்.சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பால் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக உள்ளது.

பிறந்த குழந்தைக்கு கூட பால் ஆதார் கார்டு வாங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் பால் ஆதார் கார்டு கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படாது. பால் ஆதார் கார்டு நீல நிறத்தில் இருக்கும். குழந்தை ஐந்து வயதை தொடும் வரை மட்டும் பால் ஆதார் கார்டு செல்லும்.ஐந்து வயதை கடந்த பிறகு ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று பயோமெட்ரிக் விவரங்களை பெற்றோர்கள் பதிவு செய்வது அவசியம். பால் ஆதார் கார்டு பெறுவது மிகவும் சுலபமான ஒன்றுதான்.

அதற்கு முதலில் https://uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் “My Aadhaar’ பிரிவின் கீழ் Locate an Enrolment Centre ஆப்ஷனை கிளிக் செய்து  ‘Book an Appointment’ என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் பெயர், மொபைல் எண், முகவரி, இமெயில் ஐடி ஆகிய விவரங்களை நிரப்பவும்.

பிறகு proceed to book appointment ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

குழந்தைகளுக்கு பால் ஆதார் வாங்கும்போது பெற்றோர் தங்களது ஆதார் கார்டை காட்ட வேண்டும்.

குழந்தையின் போட்டோவும், பெற்றோரின் பயோமெட்ரிக் சரிபார்ப்பும் தேவை.

அதன் பிறகு உங்கள் குழந்தைக்கான பால் ஆதார் வந்துசேரும்.

Categories

Tech |