நம்முடைய அன்றாட உணவில் ஆரோக்கியம் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதைப்போல நம்முடைய குழந்தைகளுடைய ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் வளரும் பருவத்திலேயே ஆரோக்கியமான உடல் நிலையோடு வளர்ந்தால் தான் பிற்காலத்திலும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
பொடித்த சர்க்கரையை கட்டிகளில்லாமல் சலித்து சத்து மாவுடன் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். பின்பு நெய்யை சூடாக்கி சத்து மாவு மற்றும் சர்க்கரை கலவையில் ஊற்றி கலந்து கொண்டே இருக்க வேண்டும். உருண்டையாக பிடித்தால் உதிராமல் இருக்கும். சரியான பதம் வந்த பிறகு லட்டு போல உருண்டை பிடிக்க வேண்டும். இந்த தானியத்தில் இரும்புச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு சிறந்தது.