ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கான உயர்கல்வி செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கல்வி கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிக அளவு இருப்பதால் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உயர்கல்விக்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியமாக உள்ளது. கல்விச் செலவுகள் ஒரு பக்கம் உயர்ந்து வர மறுபக்கம் பணவீக்கமும் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பணவீக்கத்தை சமாளித்து அதிக லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்.
தற்போது ஆண்டுக்கு சராசரி பணவீக்கம் 6 சதவீதமாக உள்ளது. அதனால் குறைந்த பட்சம் 10 சதவீதம் லாபம் ஆவது தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு உதாரணமாக தற்போது உங்களிடம் பத்து லட்சம் ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணம் 15 ஆண்டுகளில் பணவீக்கத்தை சமாளித்து 10% லாபம் கொடுத்தால் 42 லட்சம் ரூபாய் ஆக மாறிவிடும். ஆகவே 15 ஆண்டுகளில் 45 லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும் என்பது இலக்கு.
இப்போது 42 லட்சம் ரூபாய் இலக்கிற்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? குறைந்தது 10 சதவீதம் லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலமாக 15 ஆண்டுகளில் 42 லட்சம் ரூபாய் இலக்கை நீங்கள் எட்ட முடியும். இருந்தாலும் என்று 10 விழுக்காட்டுக்கும் மேல் நல்ல லாபம் தரக்கூடிய ஏராளமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. அதனால் உங்களுக்கான லாபம் மென்மேலும் பெருகும். குழந்தையின் உயர்கல்வி கனவையும் நீங்கள் தொட்டுவிடலாம். எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்.