உங்கள் குழந்தை தொடர்ந்து கை சூப்புவதை தவிர்க்க மருந்துகள் தடவுவதை தவிர்த்து இதனை செய்து வந்தால் போதும்.
நம் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக முக்கியமான கடமை. அதனை பெற்றோர்கள் சரியாக செய்ய வேண்டும். அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உணவளிப்பது, அறிவுப்பூர்வமான செயல்களை சொல்லிக் கொடுப்பது என அனைத்தையும் பெற்றோர்கள் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தைகள் கை சூப்புவதை தடுப்பதுதான். உங்கள் குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க, அவர்களுக்கு கைகளை பயன்படுத்தக்கூடிய விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள்.
விரல் சூப்புவதை கவனித்தால், உடனே அதை எடு, இதை எப்படி செய்வது செய்து காட்டு என பேச்சுக் கொடுங்கள். சாப்பிட ஏதாவது வேண்டுமா என கேட்டு கொடுங்கள். கேரட், ஆப்பிள் மற்றும் பீட்ரூட் போன்ற கடித்து சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை பச்சையாக தோல்சீவி கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக பெரும்பாலான குழந்தைகள் தனிமையை உணரும் போதுதான் கை சூப்புகிறது. அதனால் பெற்றோர்கள் குழந்தையை தனிமையில் விடமால் பார்த்து கொள்ளுங்கள். மேலும் குழந்தைகள் கை சூப்புவதை தடுப்பதற்காக மருந்துகள் கையில் தடவுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.