நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
சுண்டைக்காயில் உப்பும் தயிரும் சேர்த்து ஊற வைத்து வெயிலில் காய வைத்து வத்த குழம்புடன் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும். சமைப்பதற்கு முன்பு அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதன் பிறகு சமைத்தால் சாதம் பொலபொலவென்று இருக்கும்.சேப்பங்கிழங்கு, பிடி கருணை ஆகியவற்றை இட்லி தட்டில் வேக வைத்தால் குழையாமல் இருக்கும். துவரம்பருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் வேகவைத்தால் எழுதில் வெந்துவிடும். கோதுமை மாவில் சிறிதளவு இளநீர் விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மெதுவாகவும் மிகவும் ருசியாகவும் இருக்கும்.