Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க சாம்பார்ல கட்டாயம் இந்த காய சேர்த்துக்கோங்க…சுவை மட்டுமல்ல… மருத்துவ குணமும் அதிகம்..!!

நம் சாம்பாரில் இந்த காயை சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளது இதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சாம்பாரில் முள்ளங்கி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவு சத்துக்களும் நிறைந்தது. இதனை பொறியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சிலர் இதை ஒதுக்குவது உண்டு. இது உட்கொள்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். முள்ளங்கி உட்கொள்வதால் சில நோய்கள் வேரிலிருந்து அகற்றப்படுகிறது. புற்றுநோய் என்பது உயிருக்கு ஆபத்தானது. முள்ளங்கியை நாம் சாப்பிடும் போது புற்றுநோய் உருவாகக் கூடிய செல்களை குறைகின்றது.

ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. இதில் ஏராளமான பொட்டாசியம் உள்ளதால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கிறது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் முள்ளங்கி உட்கொள்வதால் நன்மை பயக்கும். முள்ளங்கி சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். செரிமான செயல்பாட்டை பராமரிக்கும். சிறுநீரகங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் காய் என்றால் அது முள்ளங்கி தான். முள்ளங்கி சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் அகற்றப்படுகின்றன.

Categories

Tech |