பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருக்கிறதோ அதனைப் போலவே உங்களின் ஆண் குழந்தைகளுக்காக மத்திய அரசு பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டம் இந்திய தபால் துறையில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தைகளின் பெயரில் நீங்கள் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை சேமிக்க முடியும்.
இதில் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம். 8.1 சதவீதம் வட்டி லாபம் கிடைக்கும். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு வருடமும் மாறுபடும். இந்த திட்டத்தில் இணைய ஆண் குழந்தைகள் வயது வரம்பு எதுவும் கிடையாது. உங்களது மகனுக்கு கணக்கு தொடங்க விரும்பினால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று கணக்கு திறக்கலாம்.குழந்தையின் வயது பத்து வருடங்களுக்கு மேல் இருந்தாலும் அந்த குழந்தையின் பெயரில் நீங்கள் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். ஒருவேளை பத்து வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு கணக்கு தொடங்க வேண்டும்.
அவ்வாறு கணக்கு திறந்த பின்னர் அந்த கணக்கை தமிழக முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் டிரான்ஸ்பார்ம் செய்து கொள்ள முடியும். இந்த கணக்கை தொடங்குவதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரி, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியதில் இருந்து ஏழாவது ஆண்டில் 50 சதவீத தொகையை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
அதனை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 வருடங்கள் முடிந்த பிறகு கணக்கை மூடி விடலாம். இந்தத் திட்டத்தில் சேமிக்கும் பணத்தை முன்கூட்டியே நீங்கள் எடுக்க விரும்பினால் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம். பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் சிறப்பு சலுகை ஒன்றும் உள்ளது. அதாவது இந்த திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமானவரி விலக்கு கிடைக்கும். எனவே உங்களுடைய செல்ல மகளின் எதிர்காலத்தைக் காக்க அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உடனே இந்த கணக்கை தொடங்குங்கள்.