நம் வீடுகளில் என்னதான் ஹார்பிக், பிளீச்சிங் பவுடர் போன்ற நிறைய செலவு செய்து பல பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் உப்பு நீரால் ஏற்படும் கரை திரும்ப வரத்தான் செய்யும். அதற்காக கவலைப்பட வேண்டாம். வெறும் 5 ரூபாய் செலவில் பளிச்சுனு உங்களது கழிப்பறையை சுத்தமாக மாற்றலாம் .
கடின நீர் கரைகள், குழாய்கள், சுவர்கள் மற்றும் தட்டுகளில் விரைவாக உருவாகும். காலப்போக்கில் துரு போன்று உண்டாக்கி பார்க்கவே அசிங்கமாக காட்சி தரும். இந்த கரைகளை நீக்குவது மிகவும் கடினம். கழிப்பறை தவிர வேறு எங்கும் இது இவ்வளவு சிக்கலாக இருப்பதில்லை. கழிவறையை தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். டாய்லெட்டில் உப்புநீர் கரைகளை அகற்றுவதற்கு பல வர்த்தக தயாரிப்புகள் கடைகளிலும் கிடைத்தாலும் ரசாயனங்கள் எதுவும் இல்லாமல் உங்களது டாய்லெட்டை பளிச்சென்று மாற்ற முடியும். அவை என்னென்னவென்று இதில் தெரிந்து கொள்வோம்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர், இந்த இரண்டும் டாய்லெட்டில் உள்ள உப்புகளை போகக்கூடிய தன்மை வாய்ந்தது. ஒரு கப் வினிகரை டாய்லெட் பவுலில் ஊற்றி டாய்லெட் பிரஷ்களை கொண்டு சுற்றிலும் தேய்த்து விட்டு. பின்னர் ஒரு நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். ஒரு கப் பேக்கிங் சோடாவை டாய்லெட்டில் ஊற்றவும். பின்னர் 1 முதல் 2 கப் வினிகரை மறுபடியும் சேர்க்கவும். இதனால் நுரை பொங்கி கொண்டு வரும். 10 நிமிடங்கள் இதை அப்படியே வைத்துவிட்டால் டாய்லெட் சுற்றியுள்ள கருவளையங்கள் அனைத்தும் சென்றுவிடும். இந்த கட்டத்தில் டாய்லெட்டை பிளஸ் செய்யவேண்டாம். ஒரு அரை மணி நேரம் வரை ஊற விடுங்கள். கரை போகும்வரை ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் நன்றாகத் தேயுங்கள். இப்போது அலசுங்கள். இப்போது உங்களது டாய்லெட் பளிச்சென்று மாறிவிடும்.
போராக்ஸ் ஒரு மல்டி பர்ப்பஸ் கிளீனிங் தயாரிப்பு. இது டாய்லெட் மற்றும் குழாய்களில் படியும் கடின நீர் கரையை நீக்க பயன்படுகிறது. போரக்ஸ் பவுடரை டாய்லெட்டில் ஊற்றி பிரஸை வைத்து நன்றாக தேய்க்கவும். பின்னர் இதனுடன் ஒரு கப் வினிகரை ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் டாய்லெட்டை பிளஸ் செய்து அலசவும். டாய்லெட்டில் கடினமான உப்புநீர் கறைகளை அகற்ற மற்றொரு தேர்வு ஸ்டீல் நார்கள். இதை வைத்து வெறும் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்ய முடியும். வீட்டு உபயோக கிளீனர் உடன் இதை பயன்படுத்தலாம்.