மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கு நியூஸிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .
மியான்மரில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு அந்நாட்டு குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மியான்மரின் நட்பு நாடான நியூசிலாந்து மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருநாட்டின் அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்துள்ளது .மேலும் மியான்மருக்காண நியூஸிலாந்தின் உதவிகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில் மியான்மரில் நடப்பதை நாங்கள் கண்காணித்து வருகின்றோம். அங்கு நடக்கும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் நடவடிக்கையை பார்த்து நியூஸிலாந்து குடிமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளோம் . மியான்மரின் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வகையில் நியூஸிலாந்திலிருந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் .இதுகுறித்து விவாதிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறப்பு அமர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.கடந்த திங்கட்கிழமை முதல் மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு அங்குள்ள தலைவர்களான ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் சிறைபிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது .