திருநெல்வேலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமால் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று பரவி சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியது. இதில் முககவசம் அணிவது என்பது கட்டாயமாக பின்பற்றபட வேண்டிய ஒன்றாகும். இதனால் தொற்றின் பரவல் மெதுவாக கட்டுக்குள் வந்தது.
ஆனால் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
இதனால் அனைவரும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதையடுத்து எவரேனும் அலட்சியமாக செயல்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநைனார் தலைமையில் குழுவினர் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர். அதில் முககவசம் அணியாத 10 பேருக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை கொடுத்துள்ளார்.