Categories
Tech டெக்னாலஜி

உங்க பணத்துக்கு ஆபத்து…. ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை…. இனி இதை பண்ணாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அவ்வகையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ள வங்கி செயலிகளை குறிவைத்து பயனர்களின் தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிக்க உதவும் சோவா என்ற வைரஸ் பரவி வருவதாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே மொபைல் பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டது.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வங்கி செயலிகளை தாக்கும் சோவா என்ற ட்ரோஜன் பரவி வருவதாக வங்கிகள் தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இதில் சிக்கினால் பயனர்களின் பணம் கொள்ளை போகும் அபாயமும் உள்ளது.இதிலிருந்து தப்பிக்க எந்த ஒரு ஆப் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்.அடையாளம் தெரியாத நபர்கள் எதாவது லிங்க் அனுப்பினால் அதனை கிளிக் செய்து ஆப் டவுன்லோடு செய்ய சொன்னால் அதனை செய்யக்கூடாது.இது போன்ற எதையும் நம்பி ஏமாறாமல் எந்த ஒரு செயலியை வேண்டுமென்றாலும் கூகுள் பிளே ஸ்டோர் வாயிலாக டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும் என எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

Categories

Tech |