Categories
பல்சுவை

உங்க பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா?…. இதுதான் சிறந்த திட்டம்….. உடனே போங்க….!!!!!

எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா  திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.  கிசான் விகாஸ் பத்ரா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முறை முதலீட்டுத் திட்டமாகும். இதன் கீழ் உங்கள் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகிறது. கிசான் விகாஸ் பத்ரா நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் பெரிய வங்கிகளிலும் கிடைக்கிறது.

அதன் முதிர்வு காலம் தற்போது 124 மாதங்கள் ஆகும். இதில் குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதன் கீழ் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை.  கிசான் விகாஸ் பத்ரா (KVP) இல் ஆவண (Certificate) வடிவத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ரூ .1000, ரூ 5000, ரூ .10,000 மற்றும் ரூ .50,000-க்கான சர்டிஃபிகேட்டுகள் கிடைக்கின்றன. தபால் அலுவலக திட்டங்களுக்கு அரசு உத்தரவாதம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இவற்றில் முதலீட்டாளர்களுகு எந்த ஆபத்தும் இல்லை.

 

தேவையான ஆவணங்கள்

இந்த திட்டத்தில் முதலீட்டு வரம்பு இல்லை, எனவே பணமோசடிக்கான அபாயமும் உள்ளது. எனவே, அதில் ரூ .50,000 க்கும் அதிகமான முதலீடுகளுக்கு பான் கார்டை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனுடன், அடையாள அட்டையாக ஆதார் கார்டையும் வழங்கவேண்டும். இதில் 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடு செய்தால், நீங்கள் ஐ.டி.ஆர், சம்பள சீட்டு மற்றும் வங்கி அறிக்கை போன்ற வருமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சர்டிஃபிகேட்டுகளை வாங்குவது எப்படி

1. Single Holder Type Certificate: இது விண்ணபிக்கும் நபருக்கோ அல்லது சிறு வயதுடையவர்களுக்கோ வாங்கப்படுகிறது
2. Joint A Account Certificate: இது இரண்டு பெரியவர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. இருவருக்கும், அல்லது ஒருவர் இறந்த நிலையில், உயிருடன் இருப்பவருக்கு தொகை அளிக்கப்படும்.
3. Joint B Account Certificate: இது இரண்டு பெரியவர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. இருவரில் ஒருவருக்கு அல்லது ஒருவர் இறந்த நிலையில், உயிருடன் இருப்பவருக்கு தொகை அளிக்கப்படும்.

கிசான் விகாஸ் பத்ராவின் சிறப்பம்சங்கள்

1. இந்த திட்டம் உத்தரவாத வருமானத்தை அளிக்கிறது. இது சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. எனவே இந்த முதலீடு மிகவும் பாதுகாப்பானது.
2. இதில், திட்ட காலம் முடிந்த பிறகு, முதலீட்டாளர் முழுத் தொகையைப் பெறுவார்.
3. இந்தத் திட்டத்தில், வருமான வரி 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்காது.
4. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு முழுமையாக வரி விதிக்கப்படும். மெச்யூரிட்டுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகைக்கு வரி இல்லை.
5. மெச்யூரிட்டுக்கு பிறகு தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதன் லாக்-இன் காலம் 30 மாதங்கள் ஆகும். இதற்கு முன், நீங்கள் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்க முடியாது. கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டாலோ அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தாலோ மட்டும்தான் முன்னரே தொகையை எடுக்க முடியும்.
6. இந்த திட்டத்தில் ஒருவர் 1000, 5000, 10000, 50000 ஆகிய பிரிவுகளில்  (Denominations) முதலீடு செய்யலாம்.
5. கிசான் விகாஸ் பத்ராவை இணை அல்லது செக்யூரிடியாக வைத்து நீங்கள் கடன் பெற முடியும்.

Categories

Tech |