ஆபத்தில்லா முதலீடு என்பதால் மக்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நீண்டகால பலன்களை கருதி சில அஞ்சலக திட்டங்கள் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவை ஆகும். உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில் எந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
கிசான் விகாஸ் பத்ரா
இந்த திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் சுமார் 7 சதவீத வட்டி விகிதத்தில் இரட்டிப்பாக்கும் திறனுடையது ஆகும். எடுத்துக்காட்டாக நீங்கள் இந்த திட்டத்தில் ரூபாய்.2 லட்சம் முதலீடு செய்தால் 124 மாதங்களுக்குப் பின் ரூ.4 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் நீங்கள் ரூபாய் .1000 கூட முதலீடு செய்யலாம். 8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அத்துடன் இத்திட்டத்தில் முதலீடு செய்ய உச்சவரம்பு எதுவுமில்லை.
சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்
60 வயதிற்கு அதிகமான மூத்தகுடிமக்களுக்கான இந்த திட்டமானது முதலீடு செய்பவருக்கு 7.4 சதவீத வட்டிவிகிதத்தை வழங்குகிறது. சீனியர் சிட்டிசன் ஒருவர் இத்திட்டத்தில் ரூபாய்.2 லட்சம் முதலீடு செய்தால், தற்போதுள்ள வட்டி விகிதத்தின்படி 5 வருடங்களுக்கு பின் அவருக்கு ரூபாய்.2,76,000 கிடைக்கும். மீண்டுமாக 5 வருடங்களுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்தால் அவர்களின் முதலீட்டு பணம் கிட்டத்தட்ட ரூபாய்.37200 கிடைக்கும். இன்னும் ஓராண்டிற்கு முதலீட்டை நீடித்தால் கடைசியில் ரூபாய்.2 லட்சம் முதலீடு 11 வருடங்களில் இருமடங்கு ஆகும்.