Categories
டெக்னாலஜி

உங்க பழைய போனை கொடுத்துட்டு…. புதிய போன் வாங்க…. இது தான் சூப்பர் சான்ஸ்…!!!

உங்களுடைய பழைய போனை கொடுத்து விட்டு புது போன் வாங்குவதற்கு அருமையான வாய்ப்பை ஷியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சலுகையின் கீழ் அனைத்து வகையான ஷியோமி பழைய போன்களையும் கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம்.

அந்தவகையில் Mi 11X 5G, Mi 11X Pro, Mi 10i, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max, Redmi Note 10S, Mi 10T, Mi 10T Pro உள்ளிட்ட பழைய போன்கள் இருந்தால் அதை கொடுத்து விட்டு தள்ளுபடி விலையில் வேறு போன்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக Mi 11X 5G (6GB + 128GB) ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டால் இதன் ஒரிஜினல் விலை ரூ.48,000 ஆகும். ஆனால் எக்சேஞ்ச் ஆஃபரில் 39,999 ரூபாய்க்கு இந்த போனை வங்கிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி இதில் 3,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

Categories

Tech |