Categories
பல்சுவை

உங்க பாத்ரூம் டைல்ஸ் கறையா இருக்கா…? பளிச்சுன்னு புதுசு போல மாற….. இப்படி செஞ்சி பாருங்க….!!!!

நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு கறை படிந்த டைல்ஸ்களையும், பாத்ரூம் சிங்குகளை சுத்தம் செய்ய முடியும் எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நீரில் சிறிது சோப் சேர்த்து நன்கு கலக்கவும். பின் ஒரு சுத்தமான துணியை கரைசலின் நனைத்து கறை படித்த பகுதியை நன்கு துடைக்கவும். பின்னர் அந்த இடத்தை தண்ணீர் வைத்து கழுவ வேண்டும். எண்ணெய் கரை இருந்தால் நீங்கிவிடும். உணவு காப்பி மற்றும் தேனீர் ஆகிய கறைகளை அகற்ற ஒரு சிறிய அளவு ஹைட்ரஜன் பெராக்ஸைட் மற்றும் சில துளி அமோனியாவை சேர்த்து கலக்கவும்.

ஒரு சுத்தமான துணியை எடுத்து கரை படிந்த பகுதியில் துடை த்தால் கரை நீங்கிவிடும். நீர் ஆவியாகி வெள்ளை கனிம படிவுகளை படிவ செய்வதால் குழாய்களின் அழகு கெட்டுப் போகிறது. இந்த கறைகளில் அகற்றுவது மிகவும் கடினமானது. இப்போது வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி குழாயில் உள்ள கறைகளை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம். காகித துண்டுகளை வெள்ளை வினிகரில் நனைத்து நிறமாற்றம் அடைந்த குழாய் சுற்றி அந்த காகித துண்டுகளை சுத்தவும். ஒரு மணி நேரம் கழித்து ஊறவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் நனைத்து சுத்தம் செய்து வினிகரில் நனைத்து குழாயின் மேல் துடைத்தால் கரை நீங்கிவிடும்.

ஒருவேளை குழாயில் இன்னும் வெள்ளைப் படிவு இருந்தால் ஒரு கிண்ணத்தில் கால் கப் வினிகர், கால்கப் பேக்கிங் சோடா எடுத்து பேஸ்ட் மாதிரி செய்து கரை உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரிலும் துடைத்து எடுத்தால் குழாய் பளிச்சென்று இருக்கும். குளியலறையில் உள்ள சிங்கிள் கடினமான கரைகள் படிந்து இருக்கும் பொழுது ஒரு கப் ஒரு பாத்திரத்தில் அரைக்க பேக்கிங் சோடா, கால் கப் வெள்ளை வினிகருடன் சேர்த்து பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளவும்.

பின் குளியலறை சிங்கில் வெதுவெதுப்பான நீரை தெளித்து அதன் மேல் உப்பை தூவவும் இப்போது இந்த பேஸ்ட்டை கரை உள்ள இடங்களில் தேய்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின் ஸ்க்ரப்பர் கொண்டு அந்த பகுதியை துடைத்து எடுத்தால் கரை நீங்கிவிடும். குழாயின் அடிப்பகுதி மற்றும் சுற்றி துடைக்க பழைய டூத் பிரஷை பயன்படுத்தவும்.

Categories

Tech |