பான் கார்டு என்பது நிதி வர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. வங்கி கணக்கை திறப்பது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பான் கார்டு அனைத்திற்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இது KYC ஆகவும் செயல்படுகின்றது பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யவோ தங்கம் வாங்கவோ அல்லது அரசாங்க திட்டத்தில் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அடையாள அட்டையாக பான் கார்டு பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும் உங்கள் நிதி வரலாற்றை கண்காணிக்கும் விதமாக அதனுடன் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பான் கார்டுக்கு ஏதேனும் காலாவதி இருக்கிறதா பான் கார்டு எத்தனை நாட்களுக்கு முறையான ஆவணமாக வேலை செய்கின்றது பான் கார்டில் செல்லுபடி பற்றி இன்னும் உங்களுக்கு தெளிவான புரிதல் இல்லை என்றால் இங்கே அதைப்பற்றி காண்போம். NSDL மூலம் பான் கார்டு வழங்கப்படுகின்றது பான் கார்டு சட்டபூர்வ ஆவணம் என அழைக்கப்படுகின்றது.
ஏனென்றால் அது உங்களின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும் ஆவணமாக விளங்குகிறது வரி ஏய்ப்பை தடுக்கவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அதன் செல்லுபடி ஆகும் தன்மையை அதாவது எத்தனை நாட்களுக்கு அது பயன்படுத்த முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் பான் கார்டின் செல்லுபடி ஆகும் காலம் வாழ்நாள் வரை இருக்கிறது. ஆனால் ஒரு நபரின் மரணத்திற்கு பிறகு தான் அவரது பான் கார்டு ரத்து செய்ய முடியும் அல்லது இறப்பு சான்றிதழ் உதவியுடன் தேவையான அனைத்து இடங்களிலும் புதுப்பிக்கப்படுகிறது.
பான் கார்டு 10 இலக்க எண்ணெழுத்து என்னை கொண்டிருக்கிறது இந்த பான் கார்டில் யாருடைய பான் எண் இருக்கிறதோ அந்த நபரின் தகவலும் இருக்கும் சட்டப்படி ஒருவர் தன்னிடம் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க முடிகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை இருக்கிறது வருமான விதிகளின்படி யாராவது ஒன்றிக்கும் மேற்பட்ட பான் என்னை வைத்திருந்தால் அது சட்டவிரோதமானதாகும் இதற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படக்கூடும்.
மேலும் வருமான வரி சட்டம் 1961 பிரிவின் 272b களின்படி கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட பான் என் வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம் இதற்கு முதலில் இ ஃபைலிங் போர்டலுக்கு செல்ல வேண்டும் instant PAN through aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின் get new pan என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் உங்களிடம் ஆதார் எண் கேட்கப்படும் அதன் பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படுகிறது ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் உங்களுக்கு e-pan வழங்கப்படுகிறது உங்கள் பிசிகல் பான் அட்டையும் நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.