தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக கணக்கு தொடர்பான தகவல்களை எதுவும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது.ஏனென்றால் பல மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் பி எப் கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளில் சிக்கினால் உங்களின் கணக்கிலிருந்து பணத்தை நொடிப் பொழுதில் திருடிவிட அதிக வாய்ப்பு உள்ளது.
தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் யாராவது கேட்டால் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதில் அளிக்கக்கூடாது.குறிப்பாக ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் எதையும் பகிரக்கூடாது. எந்த ஊரு சேவைக்கும் whatsapp அல்லது சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் எந்த தொகையையும் டெபாசிட் செய்ய சொல்லி கேட்காது.
எனவே மோசடிகளில் ஏமாறாமல் பிஎப் கணக்கு தாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும் ஒருவேளை அப்படி யாராவது தனிப்பட்ட தகவல்களை கேட்டு ஏதேனும் அழைப்பு அல்லது செய்தி வந்தால் உடனே காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.