தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் சிலர் வேறு ஒருவரின் பெயரில் சிம் கார்டு பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் நம் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிப்பதற்கு தொலைத்தொடர்பு துறை புதிய வசதியை வழங்கியுள்ளது. மக்கள் tafcop.dgtelecom. gov.in என்ற போர்ட்டலுக்கு சென்று போன் நம்பரை அடித்தால் உங்கள் பெயரில் செயல்படும் அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். மேலும் இதில் நீங்கள் போன் நம்பர்கள் மற்றும் மோசடிகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.
Categories