Categories
தேசிய செய்திகள் பல்சுவை

உங்க பெற்றோர்களுக்கு பணம் சேமிக்கணுமா…? அப்போ இதுல ஜாயின் பண்ணுங்க…. அசத்தல் திட்டம்…!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பலவகையான சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் முக்கியமானது ஒன்றுதான் “எஸ்பிஐ வீகேர் திட்டம்”. இந்த திட்டத்தின் மூலம் முதியவர்கள்  ஓய்வு காலத்தில் தங்களுடைய செலவினை தாங்களே பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும். கொரோனாவுக்குப் பிறகு இந்த திட்டத்தில் அதிகமான பேர் இணைந்துள்ளனர். கொரோனா  பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டம் 2022 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

எஸ்பிஐ வங்கி இந்த திட்டத்தை கடந்த மே 12ஆம் தேதி தான் தொடங்கியது. இந்த திட்டம் முடிவடையும் காலம் மொத்தம் ஐந்து வருடங்கள் மட்டுமே. அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் வழக்கமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கபடும் வட்டியை விட 0.30 சதவீதம் கூடுதலான வட்டி கொடுக்கப்படுகிறது. தங்களுடைய பெற்றோர்களுக்கு ஏதேனும் சேமிப்பு திட்டத்தில் பணம் டெபாசிட் செய்ய விரும்புபவர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்தால் அதிக லாபம் கிடைக்கும்.

Categories

Tech |