Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உங்க பொண்ண கூட்டிட்டு போங்க…. மர்மமான முறையில் உயிரிழந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் திருப்பூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிரியாவின் சகோதரி குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக பிரியா திருப்பூரில் இருந்து பள்ளக்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனது மாமியார் வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார்.

இந்நிலையில் மதன்ராஜ் பிரியாவின் தாயை  செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகளை அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியாவின் பெற்றோர் மதன்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பிரியா மர்மமான முறையில் இறந்து  கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியாவின் சடலத்தை  கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து  உதவி ஆட்சியர்  விசாரித்து   வருகிறார்.

Categories

Tech |