இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் புதுவிதமான யுகங்களை கையாண்டு மோசடி கும்பல் பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் மக்களுக்கு அவ்வபோது பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான XVigil இரண்டு மோசடி செயலிகள் குறித்து எச்சரித்துள்ளது. அதன்படி Kerala lottery online and India Kerala lotteryஎன்ற இரண்டு செயல்கள் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் லாட்டரி கோடியாக பணம் கிடைக்கும் என ஏமாற்றி பணத்தை கரப்பதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.மேலும் இந்த கும்பல் ஆறு போலி யுபிஐ ஐடி மூலம் பண மோசடியில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.