தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர கால டேட்டா கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அவசர நேரத்துக்கு டேட்டா வசதியை பணமில்லாமல் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதிகபட்சமாக ஐந்து முறை ஒரு ஜிபி டேட்டா கடன் பெறலாம். ஒரு ஜிபி டேட்டாவின் விலை 11 ரூபாய் ஆகும். இந்த கடன் வசதியை மைஜியோ செயலி மூலம் பெற முடியும்.