ஸ்மார்ட்போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Gpay, Phone pay, Paytm போன்ற செயலிகளின் வழியே பணம் திருடப்படுவதை தடுக்க போன் தொலைந்த உடனே அவற்றை பிளாக் செய்ய வேண்டும். அவ்வாறு பிளாக் செய்ய Gpay 18004190157, Phone pay 08068727374, Paytm 08068727374 என்ற எங்களுக்கு போன் செய்யலாம்.
மேலும் www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உரிய தகவல்களை அளித்து மொபைல் போனை முடக்கலாம்.
நீங்கள் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோராக இருந்தால், www.google.com/android/find என்ற முகவரிக்கு சென்று கூகுள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி உள்ளே நுழைந்த உடன் உங்கள் மொபைல் போன் விவரங்கள் அனைத்தும் இருக்கும்.அதில் பாதுகாப்பு மற்றும் மளிக்கும் வசதியை தேர்வு செய்து தொலைந்த ஃபோனில் உள்ள தரவுகளை அழித்து விடலாம்.
அடுத்ததாக மொபைல் போன் தொலைந்த உடனே சிம் கார்டை முடக்க வேண்டும்.மொபைல் தொலைந்து போனதற்கு முதல் தகவல் அறிக்கையுடன் உங்கள் telegram ஆப்ரேட்டர் இடம் சென்று அல்லது வாடிக்கையாளர் குறை தீர்ப்பு எண்ணில் அழைத்து சிம் கார்டை முடக்கி விடலாம்.