Categories
உலக செய்திகள்

“உங்க மகள்களை எங்களுக்கு மனைவியாக்குங்க”… தலிபான்களின் மிரட்டல்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டு மக்களிடம் உங்களது மகள்களை எங்களுக்கு மனைவி ஆக்குங்கள் என்று கூறி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் உள்ள பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தங்களது வசம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் போர்க்குற்றம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தலிபான் தீவிரவாதிகள் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்வது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12 மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானில் உள்ள பொதுமக்களிடம் “உங்களது இளம் மகள்களை எங்கள் படை வீரர்களுக்கு மனைவி ஆக்குங்கள்” என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ஆலோசனை கூட்டம் ஒன்று ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் விதமாக கத்தார் நாட்டில் நடைபெறுகிறது. அதில் ஆப்கானிஸ்தான் சார்பில் இரண்டாவது நாளான நேற்று மத்தியஸ்தம் பேசும் கத்தாரின் வாயிலாக கோரிக்கை ஒன்று தலிபான்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் தலிபான்களிடம் “அதிகாரத்தில் பங்கு அளிக்கிறோம் வன்முறையை கைவிடுங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |