வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை அடித்து கொன்று தலைமறைவான கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மோகதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமீத் சர்மா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இடையே அடிக்கடி வரதட்சணை குறித்து சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அமீத் வர்மா இரு தினங்களுக்கு முன் அர்ச்சனா பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டார் என கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகளின் வீட்டிற்கு சென்று பார்த்ததில் அர்ச்சனா உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் அர்ச்சனாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் யாரும் இல்லாத நிலையில் அர்ச்சனாவின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அர்ச்சனாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் அடித்து கொன்றதாக தெரியவந்துள்ளது. மேலும் அமீத் வர்மா மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.