திருமணம் முடிந்து 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் சாய்நாத் என்பவருக்கு தனது மகள் சோனம் குமாரியை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோனம் குமாரி கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை வினோத்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினோத் குமார் கூறுகையில், “எனது மகளை திருமணம் செய்து கொடுத்து ஒரு மாதத்திலிருந்தே பைக் மற்றும் 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று சாய்நாத் குடும்பத்தினர் சோனம் குமாரியை தொல்லை செய்யத் தொடங்கினர்.
சில நாட்களுக்கு முன்பு எனக்கு என்னிடம் பேசிய சாய்நாத் கேட்ட வரதட்சணையை கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அவரிடம் பேசிய அன்று இரவு சாய்நாத் குடும்பத்தில் இருந்து எனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து நான் அங்கு சென்று பார்த்த போது தூக்கில் சடலமாக என் மகள் தொங்கிக் கொண்டிருந்தால். சாய்நாத் மற்றும் குடும்பத்தினர் தான் எனது மகளை கொலை செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.