மத்தின் பெயரை குறிப்பிடாததால் கேரளாவில் 1ஆம் வகுப்புக்கு சிறுவனை சேர்க்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம் , தன்யா தம்பதியின் மகனை அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்க முடிவெடுத்து அதற்கான விண்ணப்பத்தை வாங்கி அதில் மதம் என்ற இடத்தில் எந்த மதமும் இல்லை என நசீம் குறிப்பிட்டு இருந்தார். அப்போது விண்ணப்பத்தை ஆய்வு செய்த பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தில் மதத்தை குறிப்பிட வேண்டுமென்றும் , குறிப்பிடவில்லை என்றால் பள்ளியில் சேர்க்க முடியாது என்ற தெரிவித்தார்.
இதனால் அதிர்ந்து போன நசீம் மதம் பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிட முடியாது என்று உறுதியாக இருந்தார். கேரள மாநிலத்தின் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால் மதத்தின் பெயரை குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் பள்ளி இந்த இந்த நடவடிக்கை கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து விளக்கமளித்த அமைச்சர் , இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் பள்ளி நிர்வாகம் நசீமை தொடர்பு கொண்ட போது மதத்தை குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தால் மகனை பள்ளியில் சேர்ப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதற்க்கு அடுத்தும் அந்த பள்ளியில் எனது மகனை சேர்க்க விருப்பம் இல்லை என்று வேதனை தெரிவித்த நசீம் வேறு பள்ளியில் தனது மகனை சேர்க்க முடிவு செய்ததாக தெரிவித்தார். கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அரசு பள்ளியில் இப்படி அரங்கேறியுள்ள துயரம் அனைவரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.