தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இவர் தன் அகரம் பவுண்டேசன் வாயிலாக பெரும்பாலான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். மேலும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு தன் குரலை தவறாமல் பதிவு செய்து வருகிறார். அண்மையில் நடிகர் சூர்யா மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
அதாவது, தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் யாரேனும் படித்த இளைஞர்கள் இருப்பின் அவர்களின் மேற்படிப்புக்கு உதவ தான் தயாராக இருப்பதாக கூறினார். மேலும் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து அரசு பணி கிடைக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை பல பேர் பாராட்டி வருகின்றனர்.