Categories
அரசியல் தேசிய செய்திகள்

உங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு எவ்வளவு வரி தெரியுமா?…. இதோ இதுவரை நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது நிறைய பேர் தங்களது சொந்த வாகனங்களை வீட்டில் விட்டுவிட்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கின்றனர். அலுவலகத்திற்கு, கல்லூரிக்கு செல்பவர்கள் கார் மற்றும் பைக் பெட்ரோல் டீசலுக்கு ஆகவே நிறைய செலவிட வேண்டியுள்ளது. காரணம் என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

இது பொதுமக்களின் பிரச்சனையாக மட்டும் அல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையாக தற்போது மாறிவிட்டது. மாற்றி மாற்றி தங்களை புகார் கூறி வருகின்றனர். உண்மையில் இந்த விலை ஏற்ற பிரச்சனைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியுமா. பெட்ரோல் மற்றும் டீசல் உக்கு மத்திய அரசு கலால் வரி விதிக்கின்றது.

கச்சா எண்ணெய் இறக்குமதி போன்ற பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டே இந்த வரி விதிப்பு உள்ளது. அதேசமயம் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மதிப்பு கூட்டு வரி வசூல் செய்கிறது. இந்த வரி என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஏனென்றால் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டுவருவதற்கான போக்குவரத்து செலவுகள்,கிடங்கு வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த வரி உயர்த்தப்படுகிறது.

அனைத்து மாநிலங்களிலும் இப்படி உயர்த்தப்படுகிறது இல்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் வரி விதிப்பு அதிகமாக உள்ளதா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். இப்போது மாநில வாரியாக பெட்ரோலுக்கு பொதுமக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்று நீங்களே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு – ரூ.48.6

கேரளா – ரூ.50.2

புதுச்சேரி – ரூ.42.9

ஆந்திரா – ரூ.52.4

கர்நாடகா – ரூ.48.1

தெலங்கானா – ரூ.51.6

மகாராஷ்டிரா – ரூ.52.5

கோவா – ரூ.45.8

ஒடிசா – ரூ.48.9

சத்தீஷ்கர் – ரூ.48.3

மத்தியப் பிரதேசம் – ரூ.50.6

குஜராத் – ரூ.44.5

ராஜஸ்தான் – ரூ.50.8

உத்தரப் பிரதேசம் – ரூ.45.2

டெல்லி – ரூ.45.3

ஹரியானா – ரூ.45.1

பஞ்சாப் – ரூ.44.6

உத்தராகண்ட் – ரூ.44.1

இமாசலப் பிரதேசம் – ரூ.44.4

ஜம்மு & காஷ்மீர் – ரூ.45.9

லடாக் – ரூ.44.6

பீகார் – ரூ.50

ஜார்கண்ட் – ரூ.47

மேற்குவங்கம் – ரூ.48.7

திரிபுரா – ரூ.45.8

மிசோரம் – ரூ.43.8

மணிப்பூர் – ரூ.47.7

நாகாலாந்து – ரூ.46.4

மேகாலயா – ரூ.42.5

அஸ்ஸாம் – ரூ.45.4

அருணாசலப் பிரதேசம் – 42.9

Categories

Tech |