தமிழகத்தில் தற்போது அனைவரும் தங்களின் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் பயனர்கள் இணையதளம் மூலம் தாங்கள் ஆகவே இந்த செயல்பாட்டை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டின் முந்தைய உரிமையாளரின் பெயர் மின் இணைப்பில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருந்தால் அதனை தற்போதைய உரிமையாளர் எவ்வாறு ஆதாரை இணைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் வீட்டில் உறுப்பினர் பெயரில் மின் இணைப்பு இருந்து அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் உள்ளனர். இதனால் மின் இணைப்பில் வேறு ஆதார் நம்பர் இணைப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
- அதற்கு முதலில் https://adhar.tnebltd.org/Aadhaar/என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் EB சர்வீஸ் நம்பரை கொடுக்க வேண்டும். மொபைல் எண் முன்னதாக பதிவு செய்திருந்தால், அதில் காண்பிக்கும், இல்லையென்றால் நாம் பதிவு செய்து கொள்ளலாம்.
- பின்னர் அந்த நம்பருக்கு OTP அனுப்பப்படும். ஆனால் வேறு நபரின் மொபைல் எண் இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தில் நமது மொபைல் எண்ணை பதிவு செய்து, OTP ஐ பெற்று, அதனை மாற்றிக் கொள்ளலாம்.
- பின்னர் உரிமையாளர் பெயர், அதன் கீழ் நீங்கள் உரிமையாளரா?, வாடகை தாரரா?, உரிமையாளர் ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்ற 3 தேர்வுகள் காண்பிக்கப்படும்.
- அதில், தேவையானதை தேர்வு செய்து, உங்களின் ஆதார் நகலை குறிப்பிட்ட இடத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
- இறுதியாக உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு விடும்.