பார்வையாளர்கள் முன்னால் இந்தியில் பேசும்போது நடுக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “மிகுந்த தயக்கத்துடன் தான் நான் இந்தி பேசுகிறேன். நான் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இந்திக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரியான வழியில் செல்லவில்லை எனவும் வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சியில் இந்தியாவின் உட்கட்டமைப்பு சிறந்தமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஏர்இந்தியா தனியார்மயமாக்கப்படும் வரை நாள்தோறும் 20 கோடி ரூபாய் நஷ்டமடைந்து வந்ததாகவும், இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.