உங்களது ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்படாத நிலையில், IRCTC பயணிகளுக்கு இலவசமாக விமான டிக்கெட் கிடைக்குமாம். இது ஆச்சரியம் அளிக்கும் அடிப்படையில் இருந்தாலும் உண்மையான செய்தி தான். இச்சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். அதாவது, டிக்கெட் முன் பதிவு செயலி Train Man அதிரடி சலுகையை வழங்கியிருக்கிறது. ரயில் டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படவில்லை எனில், பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொள்ளும் அடிப்படையில் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Train Man ஆப் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் பெயர் “டிரிப் அஷ்யூரன்ஸ்” ஆகும். இந்த புது அம்சம், காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முடிக்க உத்தரவாதமான வழியை உறுதிசெய்கிறது. செயலியில் டிக்கெட்டை முன் பதிவு செய்த பின் பயனாளர் நிலையை சரிபார்க்கலாம். சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகும், டிக்கெட் உறுதிசெய்யப்படா விட்டால் கடைசிநிமிட மாற்றுப் பயண விருப்பங்களைத் தேடி, முன்பதிவு செய்ய ட்ரிப் அஷ்யூரன்ஸ் பயணிகளுக்கு உதவும்.
பயணிகளின் டிக்கெட் முன் கணிப்பு மீட்டர் 90 % (அ) அதற்கு மேல் இருந்தால் TrainMan ட்ரிப் அஷ்யூரன்ஸ் கட்டணமாக 1 ரூபாய் பெற்றுக்கொள்ளும். 90% க்கும் குறைவாக இருப்பின், டிக்கெட் வகுப்பின் அடிப்படையில் செயலி கட்டணம் வசூலிக்கும். சார்ட் தயாரிக்கப்பட்ட பின் டிக்கெட் உறுதி செய்யப்பட்டால், ட்ரிப் அஷ்யூரன்ஸ் கட்டணம் பயணிகளுக்குத் திருப்பித்தரப்படும். டிக்கெட் உறுதி செய்யப்படவில்லையெனில், அந்த செயலி பயணத்தினை மேற்கொள்ள பயணிகளுக்கு இலவச விமான டிக்கெட்டை வழங்கும். எனினும் டிரிப் அஷ்யூரன்க் அம்சம் விமான நிலையமுள்ள நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.