Categories
பல்சுவை

உங்க ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம்…. பெயர் சேர்க்க, நீக்க இதோ எளிய வழி…..!!!!!

ரேஷன் கார்டுகள் பல தேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுகளில் புதிதாக எந்தவொரு தகவலையும் இணைப்பதற்கு மக்கள் பல இடங்களில் அலைந்து திரிய வேண்டிய சூழல் காணப்பட்டது. தற்போது இருக்கும் தகவல் தொழில் நுட்பம் இந்த அனைத்து வேலைகளையும் எளிதாக மாற்றியுள்ளது.

அந்த வகையில் ரேஷன் கார்டில் ஏதாவது தகவல்களை சேர்க்க வேண்டும் என்றால் அதற்கான ஆன்லைன் வழிமுறைகள் உள்ளது. முதலில் ரேஷன் அட்டையில் ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு நபரின் பெயரை இணைக்க வேண்டுமானால் அதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதன்படி ஒரு ரேஷன் அட்டையில் குழந்தையின் பெயரை இணைக்க விரும்பினால் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் கார்டு,. குழந்தையின் ஆதார் கார்டு என அனைத்தும் தேவைப்படும். திருமணமான பெண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்க வேண்டுமானால் அவரது திருமண சான்றிதழ், ஆதார் அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.

தேவையான ஆவணங்கள்

  • ஆதார் கார்டு.
  • பேங்க் கணக்கு புத்தகம்.
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
  • மின்சார கட்டண ரசீது அல்லது தண்ணீர் வரி.
  • டெலிபோன் பில்.
  • வருமான சான்றிதழ்.
  • ரேஷன் கார்டு சென்டரிலிருந்து வழங்கப்பட்ட ரெசிப்ட்.
  • குடும்ப உறுப்பினர்களின் போட்டோ ஒன்று.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க

  • https://www.tnpds.gov.in/ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
  • அதில் மின்னணு அட்டை சேவைகளுக்கு செல்ல வேண்டும்.
  • அதில் உறுப்பினர் பெயர் சேர்க்க அல்லது நீக்க என்ற ஆப்சன் இருக்கும்.
  • அதில் உறுப்பினரை சேர்க்க வேண்டுமானால் சேர்க்க சென்ற ஆப்ஷனை தெரிந்தெடுக்கவும்.
  • பிறகு ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • கேப்சாக் குறியீட்டை சரியாக பதிவு செய்யவும்.
  • பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்யவேண்டும்.
  • அது மற்றொரு பக்கத்துக்கு செல்லும்.
  • அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.
  • அதன் கீழ் இருக்கும் உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு அனைத்து விவரங்களையும் சரி பார்த்து உறுதிப்படுத்தும் பாக்ஸை கிளிக் செய்யவும்.
  • உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்படும்.
  • விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு குறிப்பு நம்பர் ஒன்று அனுப்பப்படும்.
  • அதை புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மீண்டுமாக https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
  • அதில் மின்னனு அட்டை என்ற சேவையை தெரிவு செய்யவேண்டும்.
  • அதில் நீங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட எண்ணை கொடுத்து உங்கள் ரேஷன் கார்டு நிலவரங்களை செக் செய்து கொள்ளலாம்.
  • உங்களது தகவல்கள் சரியானதாக கருத்தப்பட்டால் புதிய ரேஷன் அட்டை உங்கள் வீட்டு முகவரி தேடி வரும்.

Categories

Tech |